மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும்; கூடுதல் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்!

கேரளத்தில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டு விட்டது.  2008-ஆம் ஆண்டு விதிகளின்படி தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 48-லிருந்து 16 ஆக குறைக்கப்பட வேண்டும். இதை 24.09.21 வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்பது தான்  தமிழக அரசின் நிலைப்பாடும் ஆகும்.  அந்த எண்ணிக்கையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடிகளை குறைக்கக் கோருவதன் நோக்கம் சுங்கக்கட்டண சுமை குறைய வேண்டும் என்பது தான். சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி  அமைக்கப்படும் போது, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டால், அதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. சுங்கக்கட்டண கொள்ளை தொடரும்!

மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை  மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அது தான் சுங்கச்சாவடி சீர்திருத்தத்தின் பயன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Toll Plaza March


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->