மத்திய அரசின் தொடர் அலட்சியம் - முக்கிய விவகாரத்தை கையிலெடுத்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal



தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத் தலைவர், உறுப்பினர்களை  உடனடியாக நியமிக்க வேண்டும் என்று, பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகிலுரித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி  வரும் 28-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது.  ஆனால், ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது!

எட்டாவது ஆணையம் காலாவதியாகி 9 மாதங்கள் கழித்து தான் கடந்த நவம்பர் 27-ஆம் நாள் ஒன்பதாவது ஆணையத்தின் தலைவராக  ஹன்ஸ்ராஜ் ஆஹிர் நியமிக்கப்பட்டார். அதன்பின்  3 மாதங்கள் ஆன பிறகும் ஆணையத்தின் துணைத்தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை!

ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இதற்காக உயர்நீதிமன்றத்தில்  வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது ஏமாற்றமளிக்கிறது!

கிரீமிலேயர் வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை  மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About OBC Committee 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->