போலீஸ் எஸ்ஐ வெட்டி படுகொலை., சட்டம் ஒழுங்குக்கு விடப்பட்ட சவால் - டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,! - Seithipunal
Seithipunal


திருச்சி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டு இருப்பது, காவல்துறைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் விடப்பட்ட சவால் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"திருச்சியை அடுத்த பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது காவல்துறைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படாவிட்டால் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து விடும்.

கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadas mourning to police si murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->