திமுக சார்பில் "வார் ரூம்" அமைப்பு - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளுக்காக, திமுகவின் சட்டத்துறை சார்பாக "வார் ரூம்" அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வார் ரூம் குறித்த அறிவிப்பை, திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில் தெரிவிக்க்கப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கும் – கழகத் தோழர்களுக்கும் உதவிடும் வகையில், திமுக சட்டத் துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ., (99406-66269) மற்றும் ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், கழக வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் (War Room) அமைக்கப்படுகிறது. 

தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK War Room For By Election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->