சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம்!! உறுதியாக நிற்கும் திமுக!! - Seithipunal
Seithipunal


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனியார் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க முடியாது. ஒன்றிய அரசு தான் எடுக்க முடியும்.

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை நாங்கள் வலியுறுத்துவோம். பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டதற்கு பிறகு சட்டரீதியான விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இண்டியா கூட்டணியின் அஜெண்டாவில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது" என பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது ஆர்.எஸ் பாரதியும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என கூறி இருப்பது பொறுப்பை தட்டி கழிப்பது போல அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதும், ஆர்.எஸ் பாரதியின் இந்த பதிலையும் வைத்து பார்க்கும் போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாது என்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RSBharathi said we will not conduct caste wise census


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->