போதைப் பொருட்களை விற்பதே பாஜகவினர் தான்! ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் ஆஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆளுநரை சந்தித்து திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பத்திரிக்கையின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். அண்டை மாநிலங்களிலிருந்து சர்வசாதாரணமாக தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

போதைப் பொருள் கட்டுப்படுத்த முடியாததால் இளைஞர்களும் மாணவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சீரழிகின்றனர். திறமையற்ற ஒரு முதலமைச்சர் காவல்துறையை செயல்படுத்த விடாமல் உளவுத்துறையும் செயல் இழந்துவிட்டது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.

நிலையில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அதிமுக மற்றும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் "எடப்பாடி ஆளுநரிடம் மனு கொடுத்துவிட்டு வருகிறார். அப்பொழுது செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் போதை பொருள் அதிகமாக கிடைப்பதாக சொல்கிறார். இன்று தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

சிபிஐ விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது அதன் அடிப்படையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை விஜயபாஸ்கரும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். இவர்கள் போய் ஆளுநரிடம் போதை பொருள் அதிகமாக உள்ளதாக புகார் மனு அளிக்கிறார்கள். நான் சொல்லுகிறேன்  போதைப் பொருட்களை அதிகமாக விற்பது பாஜகவினர்தான்" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RsBharathi said BJP is selling drugs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->