தூக்கம் வரலனா என்ன நோயோ.? டாக்டரை தான் பார்க்கணும்.!! நீதிபதியின் மீது பாய்ந்த ஆர்.எஸ் பாரதி.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்களை சொத்து குறிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததோடு அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி "எனக்கு கூட தான் இந்த விவகாரத்தால் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை. திடீர்னு கலைஞரின் பராசக்தி படத்திலிருந்து "நெஞ்சு பொறுக்குதில்லையே" பாடலை கேட்டேன் தூக்கம் வந்துவிட்டது. இதெல்லாம் ஒரு காரணமா.?

எனக்கு தூக்கம் வரலைனா என்ன நோயோ.? நான் தான் டாக்டரை போய் பாக்கணும்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை படித்த பிறகு 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என கூறிய கருத்துக்கு மறைமுகமாக ஆர்.எஸ் பாரதி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RSBharathi indirectly criticized justice Anand Venkatesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->