பாஜக அரசு நியமித்த ஆளுநர்கள் எல்லாம் முட்டாள்கள்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு உரையில் இருந்து சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தை நீக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எல்லாம் முட்டாள்கள் மற்றும் அறிவற்றவர்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சேர்த்தார். யாருக்கு பயந்து, யாரை எதிர்ப்பதற்காக, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற சிந்தனைக்கு எதிராக ஒரு கூட்டம் வரும் என்பதற்காக மட்டும்தான். 

அறிவில்லாதவர்கள், முட்டாள்கள், மேல் மாடியில் ஒன்றும் இல்லாதவர்கள் ராஜ்பவன் வரை வருவார்கள் என்பதற்காக தான். இந்திரா காந்திக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்துள்ளது. சிலர் மதச்சார்பற்ற என்ற வார்த்தையை எடுத்து விட வேண்டும் என துடிக்கிறார்கள். அதனை காப்பாற்ற வேண்டிய தகுதி அனைவருக்கும் உள்ளது. மம்தா தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என நினைக்கிறார். 

ஒடிசா முதல்வர் தான் மீண்டும் முதலமைச்சராக வந்தால் போதும் என நினைக்கிறார். எல்லாருக்கும் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது. எனக்கு முடிந்து போன 2ஜி வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையெல்லாம் நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்" என புத்தக வெளியீட்டு விழாவில் ஆ.ராசா பேசியுள்ளார். ஆ.ராசாவின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திமுகவினரின் இத்தகைய பேச்சுக்களுக்கிடையே இன்று திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நான் செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்த நிலையில் அவருடைய டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Rasa criticism All governors appointed by the BJP government are fools


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->