இந்தி திணிப்பு.. தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.! - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆளும் பாஜகவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியை திணித்து வருவதாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு மத்திய கல்வி நிலையங்களில் இந்திய கட்டாயமாக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருக்கும் இந்து திணிப்பை ஹிந்தி பேசாத அந்தந்த மொழி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தலைமையில் இந்தி திணிப்பையும், இந்தியா முழுவதும் ஒரே பொதுத் தேர்வு திட்டத்தையும் பாஜக அரசு கைவிட வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK protest against hindhi Imposition


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->