குஷ்புவை இழிவாக பேசிய உடன்பிறப்பு! மன்னிப்பு கேட்ட கனிமொழி! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பல திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் பாஜக நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி நான்கு பேரில் நடத்தைகளை பற்றி அவதூறாக பேசினார். மேலும் குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் சம்பந்தப்படுத்தி கீழ்த்தனமா வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இந்த பேச்சு பா.ஜ.க. நிர்வாகிகள், நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழியை குறிப்பிட்டு "ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும்போது, ​​அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்க்கப்பட்ட நஞ்சு மிக்க சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களின் கலைஞர் கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது தான் திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சியா? கனிமொழி!" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கனிமொழி "ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் எனது கட்சி திராவிட முன்னேற்ற கழகமும் இத்தகைய செயல்களை மன்னிக்காது. என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடிகிறது" என குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமூக வலைத்தளம் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின் நடத்தை குறித்து தவறான கருத்தை பதிவிட்டதற்கு வழக்குப் பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது நீதிமன்றம். அதேபோல் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து சரியான தண்டனை வழங்க முடியுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் சமூக நீதி சுயமரியாதை பற்றி வாய்கிழியப் பேசும் திமுக பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Kanimozhi apologized to actress Khushboo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->