சுயமரியாதையான சமுதாயத்தை உருவாக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சுயமரியாதை, சமதர்ம சமுதாயத்தை உருவாக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்! 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

அவரின் உரையில், "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி. சுயமரியாதை, சமதர்ம சமுதாயத்தை உருவாக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

தீண்டாமைக்கு எதிராக ஜனவரி மாதத்தில் மனிதநேய வார விழா நடத்தப்படுகிறது. சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சமூக கண்ணோட்டத்தோடு அணுகி அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும், அரசு சார்பில் ஆதிதிராவிடர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Say About Self Respect communitiy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->