8 வழிச்சாலைத் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை - திமுக அமைச்சர் எ.வ.வேலு! - Seithipunal
Seithipunal


கடந்த ஆட்சியின் போது, சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்றும், இத்திட்டம் குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்  என்றும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது, 

"கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் முடிவடையும். இதன் உள்கட்டமைப்புப் பணிகள் முடிந்த பின்னர் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.  

சட்டப்பேரவையில், கடந்த ஆட்சியின் போது சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக விவசாயிகளையும், பொதுமக்களையும் நேரில் அழைத்துப் பேசி, குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். 

பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றுதான் கூறினோமே தவிர திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்". என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister AV Velu say About Salem 8 way Road Aug 31


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->