திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.!!! 
                                    
                                    
                                   dmk members Suspension on the party
 
                                 
                               
                                
                                      
                                            திமுக மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

அதேபோல, கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ.அய்யப்பன் அவர்கள், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       dmk members Suspension on the party