இருக்குமோ?! என திமுக உடன்பிறப்பு பகிர்ந்த வீடியோ! பதறிப்போன பாஜக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் ஆப்ரேஷன் தாமரை என்ற பெயரில் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து வருகிறது. பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் கூட எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து ஆட்சியை அமைத்து வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் வழங்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாத பாஜக இத்தகைய யுத்தியை கையாள்கிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு. 

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைந்ததால் பாஜகவால் ஆபரேஷன் தாமரை திட்டம் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் தற்பொழுது நிலவை வரும் சட்டங்கள் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது பாஜக. திமுக எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கூறும் கருத்துக்களை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறது.

இதேபோன்று சமீபத்தில் நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திமுகவிற்கு தமிழக பாஜக நெருக்கடியை தந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.

இந்த நிலையில் காதலன் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் வீடியோவை திமுகவை சேர்ந்த உடன்பிறப்பு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் மாநிலத்தின் ஆட்சியைப் பிடிக்க எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க சொல்லுவார். அதற்கு எம்எல்ஏக்கள விலை கொடுத்து வாங்கித்தான் ஆட்சி கலக்க வேண்டுமா சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் ஆட்சி தானாக கலைந்து விடும் என சொல்லும் வீடியோவை "இருக்குமோ?!" என பின்னூட்டமிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் "இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" என ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்ட பதறிக் கொண்டு ரீட்விட் செய்துள்ளார். பாஜக பிரமுகரின் இந்த செயல் உண்மை தெரிந்து விட்டதோ என்ற பதற்றத்தில் செய்தது போலவே உணர்த்துகிறது. இந்த வீடியோ பதிவுகள் தற்பொழுது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. பாஜக பிரமுகர் இந்த வீடியோ பதிவிற்கும் என்ஐஏ விசாரணை கோரி இருக்கலாம் என இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK member posted video going to viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->