#ஆடியோ: சார் வணக்கம்.. திமுகவுக்கு ஓட்டு போட்டுடுங்க.. போன் போட்டு பிச்சையெடுக்கும் ஐபெக்..!  - Seithipunal
Seithipunal


திமுகவின் ஐபெக் டீம் வேட்பாளருக்கு ஆதரவாக போனில் தொடர்பு கொண்டு வாக்குசேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனல்பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரச்சாரத்தில் களமிறக்கப்பட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை துவக்கத்தில் அலையவிட்டு இறுதியில் தொகுதிகளை குறைந்தபட்ச அளவில் ஒதுக்கீடு செய்த திமுக, தேர்தல் அறிக்கையில் பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தது. மேலும், சி.ஏ.ஏ தொடர்பான வாக்குறுதியை மறந்துவிட்டு, தேர்தல் அறிக்கையிலேயே திருத்தும் செய்து நெட்டிசன்களிடம் பங்கமாக சிக்கிக்கொண்டது. 

திமுக சார்பில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பல இடங்களில் சட்டத்தினை கையில் எடுத்து, பேசிய பேச்சுகளும், செய்த நடவடிக்கைகளும் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. மேலும், திமுகவினர் தற்போதே இப்படி அராஜகம் செய்து வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்றும் மக்கள் கவலையடைய தொடங்கியுள்ளனர். 

திமுகவின் வளர்ச்சிக்காக திமுகவினரை நம்பாமல் பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐபெக் டீமை நம்பி, முதல்வர் கனவில் இலவுகாத்த கிளியாக மு.க ஸ்டாலின் இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

திமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் பல வியூகங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது பரபரப்பு ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தொகுதியின் திமுக ச.ம.உ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க கூறி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. 

இது குறித்த ஆடியோவில், திமுகவின் அந்தியூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக ஏ.ஜி. வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பெண்மணி பேசுகிறார். மறுமுனையில் பேசிய அந்தியூர் தொகுதி வாக்காளர் முதலில் கலாய்க்க தொடங்குகிறார்.

எடுத்த எடுப்பிலேயே, திமுக என்றால் எந்த கட்சி?. எடப்பாடி பழனிச்சாமி நிற்கிறாரே அந்த கட்சியா? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண்மணி, அது அதிமுக என்று கூற, அவரும் ஆமாம் அது அண்ணா திமுக.. நீங்கள் கூறும் திமுக என்ன?. தமிழ் பேசும் சீமானின் திமுகவா? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண்மணி மு.க ஸ்டாலினின் திராவிட முன்னேற்ற கழகம் என்று கூறுகிறார். 

இதனையடுத்து, மு.க ஸ்டாலினா?.. ஓ, கலைஞரின் திமுக வா... கலைஞர் திமுக என்று கூறுங்கள் என்று தெரிவிக்கிறார். இறுதியாக நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். நீங்கள் எதற்காக தொடர்பு கொண்டு இன்னாருக்கு (திமுகவிற்கு) வாக்களியுங்கள் என்று பேசுகிறீர்கள். உங்களின் ஜாதி என்ன? என்று கேள்வியை எழுப்ப, அந்த பெண்மணி அதை கூறக்கூடாது என்று தெரிவிக்கிறார். 

உங்களின் ஜாதி என்ன என்று கேட்டால் எப்படி கூறாமல், கூறக்கூடாது என்று கூறுகிறீர்களா, அதனைப்போன்று யாருக்கு வாக்களிக்க செல்கிறேன், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன். அதனை நான் யாருக்கும் சொல்லமாட்டேன். நீங்கள் வாய்ப்பு தாருங்கள் என்று தான் கேட்கலாம். வாக்களியுங்கள் என்று கூற கூடாது. நீங்கள் பேசுவது அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த தொகுதி வாக்காளர் கூறவே, பயந்துபோன பெண்மணி தனது அழைப்பை துண்டித்துவிடுகிறார். 

திமுகவின் ஐ.டி விங் மூலமாக செயற்படுத்தப்படும் ஒரு சிறிய அமைப்பு மூலமாக எப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கிறார்கள் என்று பாருங்கள். மக்களுக்கு உதவி என்றால் செய்வதில்லை. வெளியே ஹிந்தி எதிர்ப்பு பேசிவிட்டு, கட்சியின் வளர்ச்சிக்கு ஹிந்திக்காரனின் மூளையை இங்கு செயல்படுத்துகிறார்கள், அவர்கள் எப்படி தமிழகத்தின் வளர்ச்சியை சிந்திப்பார்கள். 

ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களது கட்சியின் வருமானத்தையும், எதிர்காலத்தையும் சிந்தித்துதான் செயல்படுவார்கள் என்று அந்தியூர் தொகுதி வாக்காளர் தெரிவிக்கிறார். திமுக ஐபேக்குக்கு கொடுத்த 400 கோடி இறுதியில் போன் போட்டு வாக்குப்பிச்சை எடுக்க வைக்கும் அளவிற்கு வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கஷ்டமர் கேர் வேலை என்று ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பல நிறுவனங்கள் நடந்து, அதில் மோசடி நடந்ததையடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்போது தான் அங்கு பணியாற்றும் பெண்கள் எந்த வேலைக்கு பணியமர்த்தப்பட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியவருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் வறுமையில் வாடிவரும் பெண்களுக்கு வேலையை கொடுக்கிறோம் என்று இவ்வாறான செயல்களில் ஈடுபடுத்துவது எப்படிப்பட்டது என்பது அங்கு பணியாற்றும் பணியாட்கள் கவனத்திற்கே விட்டுவிடலாம்.

ஆடியோ இணைப்பு கீழே : 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IPAC Team Begging Vote for Erode Anthiyur Constituency Candidate Audio Leaked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->