திமுக.,வுக்குள் கும்மாங்குத்து., கவுன்சிலர் மண்டை உடைப்பு.! - Seithipunal
Seithipunal


 

திருச்சி அருகே திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திமுக கவுன்சிலர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் மகாதேவன் (வயது 38). இவர் திருவெரும்பூர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இவருக்கும், பனையக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ரேணுகாதேவியின் கணவர் பார்த்தசாரதி (வயது 42) என்பவருக்கும் இடையே கட்சி ரீதியாக முன்பகை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மகாதேவன் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தசாரதி அவரது சகோதரர் விஜய் உள்ளிட்ட சில பேர் மகாதேவன் உடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியது. இதில், திமுக கவுன்சிலர் மகாதேவன் மண்டை உடைக்கப்பட்டது. அதே சமயத்தில் மகாதேவன் ஆதரவாளர்கள் பதிலுக்கு தாக்கியதில் பார்த்தசாரதி, விஜி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த இரண்டு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் கணவரும், யூனியன் கவுன்சிலரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk councilor head break in panaiyakurichi


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal