ஒரு மாத சம்பளம் கொரோனா நிதி.! 2 எம்பி கொண்ட திமுக கூட்டணி கட்சி அதிரடி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

பிற நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியா குறைவான பாதிப்படைந்துள்ளது என்றாலும், விரைவில் இந்தியாவையும் கொரோனா தாறுமாறாக தாக்கும் அபாயம் இருக்கின்றது. 

எனவே, மருத்துவமனைகளின் தேவை மற்றும் வென்டிலேட்டர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் கரோனா வைரஸ் நிதி அரசுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. திமுக எம்பிக்கள், மற்றும் எம்எல்ஏக்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை அரசிற்கு நிதியாக வழங்கி வருகின்றனர்.

அதிமுகவும் நிதியுதவி அளித்து இருக்கின்றது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுடைய எம்பிக்களின் மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நிதியாக வழங்குவார்கள் என்று டி ராஜா தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்பி கேரளாவிலும், 2 எம்பிக்கள் தமிழகத்திலும் மொத்தமாக 3 எம்பிக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk coalition party announcement about corona fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->