திடீரென அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக கூட்டணி கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் இக்கூட்டம் தொடங்கியது. 

இக்கூட்டத்தில் கே.எஸ், அழகிரி, வைகோ, கோ.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance meeting in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->