காங்கிரசுக்கு கல்தா.. கமலுக்கு சிவப்பு கம்பளம்..திமுகவின் அதிரி புதிரி கூட்டணி கணக்கு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் வரும் ஜனவரி4ம் தேதி தொகுதி பங்கீடு குறித்தன காங்கிரஸ் மாநில காங்கிரஸ் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொள்ளும் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தை ஜனவரி 3வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதன் பிறகு ஜனவரி 3வது வாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் பிரதான கட்சிக்கான திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் மிகப்பெரிய மாற்றம் இருக்கலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதே வேளையில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் இடைப்பட்ட காலகட்டத்தில் திமுக தனது கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ௯, பாண்டிச்சேரி ஒன்று என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில்8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு2 தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், கொங்கு மக்கள் தேசிய கட்சி கொங்கு முன்னேற்ற கழகம் திறக்க ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக 24 இடங்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளை விட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமைக்கான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் தொகுதிகளை பெற வேண்டும் என முனைப்பில் செயல்பட்டு வருகின்றன. பரபரப்பான அரசியல் சூழலில் வரும் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் திமுக தலைமையிலான கூட்டணி இடம் பெற்றுள்ள தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK alliance likely to start negotiations on seat allocation on jan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->