தமிழக ஆளுநர் உருவ பொம்மை எரிப்பு? திமுக நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியும், கண்டமனூர் ஊராட்சி அவை தலைவருமானச அழகர் ராமானுஜம் தமிழக ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவமையை ஏற்க உள்ளதாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகி அழகர் ராமானுஜத்தை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin arrested for try to governor statue fired


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->