நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி-விஜய பிரபாகரன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

ஆனால், இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK alone in urban local elections


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->