#Justin | காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள முக்கிய மூத்தத் தலைவர்.? பரபரக்கும் அரசியல் களம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது, வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியில் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையில், தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி, முதல் 30-ம் தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் மற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். 

இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங்கும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhig Vijay Singh may participate In Congress leader Election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->