ரூ. 12 கோடி வாங்கியதாக லஞ்ச புகாரில் சிக்கிய எடப்பாடியின் சம்மந்தி.! போலீசில் புகார்.! வைரல் ஆடியோ.!  - Seithipunal
Seithipunal


பெங்களூர் பெருநகர் வளர்ச்சி குழும தலைவர் ஜி.சி.பிரகாஷ் மூலமாக ரூ.12 கோடி ரூபாய் லஞ்சத்தை ராமலிங்கம் கொடுத்ததாகவும், பெங்களூர் பெருநகர வளர்ச்சி  குழுமத்தின் கீழ் புதியதாக குடியிருப்பு கட்டுவதற்காக ஒப்பந்தம் கொடுத்ததில் முறைகேடு செய்துள்ளதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி ராமலிங்கத்தின் மகன் சம்மந்தப்பட்ட 7  போலி நிறுவனங்கள் மூலமாக லஞ்ச பணம் கைமாறியுள்ளதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.  

இட ஒதுக்கீடு போராட்டம் நியாயமானது. உங்களின் பக்கம் நான் இருக்கிறேன் -  கர்நாடக முதல்வர் எடியூரப்பா.! - Seithipunal

இத்தகைய நிலையில், தற்போது  அப்படி கொடுக்கப்பட்டுள்ள லஞ்சப்பணம் எடியூரப்பா மகன் விஜேந்திராவுக்கு சென்று சேராதது குறித்து தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்குதாக மேலும் 12.5 கோடி லஞ்ச பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த லஞ்ச பேரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சம்பந்தி ராமலிங்கம் மற்றும் எடியூரப்பாவின் பேரன் சசிதரன் உள்ளிட்டோர் பேசிய ஆடியோ வெளியாகியது. இதன் அடிப்படையில், தற்போது துறை சார்ந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corruption case on eps brother in law


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->