ராகுல்காந்தி எம்.பி பதவி தகுதிநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ம் தேதி காலை தொடங்கியது. மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும், 21-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

இதனிடையே குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் காரணமாக அவரின் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். அப்போது ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும், பாஜக-வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MLA back shirt in assembly against Rahul Gandhi disqualified MP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->