வேற வழி இல்லை.. திமுவிடம் 15 தொகுதிகளை கேட்போம்.!! கறார் காட்டும் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கொலை கொள்ளை குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல கொலை வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளன. அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அடுத்த பிரதமராகவும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு தான் உள்ளது இந்தியாவில் ராகுல் காந்தியை விட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தான் ஏழை எளிய மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணி குறித்து வரும் ஜனவரி 29ம் தேதி திமுகவுடன் பேச உள்ளோம். காங்கிரஸ் கட்சி சார்பில் 15 இடங்களை கேட்க உள்ளோம் காங்கிரஸில் இரண்டு அணிகள் எல்லாம் இல்லை உட்கட்சி பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம். 

கார்த்திக் சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டால் வெற்றிக்காக நிச்சயம் உழைப்போம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதால் முன்னேற்றம் கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம்.

அதிமுக நான்கு அணியாக பிரிந்து இருப்பதால் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதை தவிர மக்களுக்கு வேற வழி இல்லை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவுள்ள தேர்தல் அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress demand 15 mp seats in DMK alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->