#BREAKING :: முன்னாள் அமைச்சர் கார் மீது ஆசீட் வீச்சு..!! சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!! திமுக-அதிமுக இடையே மோதல்...!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி திருவிக என்பவர் இன்று காலை திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்தார். இவர் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதால் இதற்காக கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நான்கு கார்களில் வந்த மர்ம கும்பல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கார் மீது ஆசீட் வீசியது.

இதனை அடுத்து நிறுத்தப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து அதிமுக வேட்பாளரான திருவிகவை கடத்தி சென்றனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட வந்தனர். 

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினரும் ஒன்று கூடியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் செருப்புகளை வீசி தாக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி இருதரப்பினரையும் பிரித்து கயிறு கட்டி பாதுகாப்பு வேலி அமைத்தார். தற்பொழுது இரு தரப்பினரும் இடையே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conflict between DMK and ADMK over the kidnap of ADMK candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->