மாநில அரசு அலுவலகங்களில் இனி முதல்வர் படம் இடம்பெறாது- பக்வந்த் மான் சிங்.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளில் வெற்றியும், 68 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. மேலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் இடம் பெறாது என்றும் மாறாக அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்கள் இடம்பெறும் என முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் சிங் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM photo will no longer be displayed in state government offices Bhagwant Man Singh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->