சென்னையில் பரபரப்பு.. அண்ணா சாலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இடையே மோதல்! - Seithipunal
Seithipunal


தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளாலும், சமூக ஆர்வலர்களாலும், அரசியல் இயக்கங்களாலும் அவருடைய சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மரியாதை செலுத்த சென்ற அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே ஓபிஎஸ் அணியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மரியாதை செலுத்த மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சபாநாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சார்பில் மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் புதிதாக பெரியார் புகைப்படம் அமைக்கப்பட்டு அதிமுகவினர் அனைவரும் மலைத்தூவி மரியாதை செலுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between OPS and EPS team in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->