ஈரோட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை...! - முழு மாவட்ட போக்குவரத்து ‘ரூட் மேப்’ புதுப்பிப்பு...!
Chief Minister MK Stalins visit Erode Entire district transport route map updated
ஈரோட்டில் இரண்டு நாள் அரசு சுற்றுப்பயணத்தில் சென்றடைந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (புதன்கிழமை) அங்கு நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இவரது பயணத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படுவது:
சேலம்–கோவை வழிப் போக்குவரத்து மாற்றம்
சேலம் நோக்கில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள், சங்ககிரி – திருச்செங்கோடு – கொக்கராயன்பேட்டை – திண்டல் – பெருந்துறை வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், கோவையிலிருந்து சேலம் நோக்கி வரும் பெரிய வாகனங்கள், காஞ்சிக்கோவில் பிரிவிலிருந்து கவுந்தப்பாடி – கிருஷ்ணாபுரம் – அம்மன் கலை அறிவியல் கல்லூரி – சித்தோடு பாலம் – ஈரோடு-சத்தி மேம்பாலம் – லட்சுமிநகர் பாதை வழியாக செல்க வேண்டும்.
மேட்டூர் – கோவை வழித்தட மாற்றம்
மேட்டூரிலிருந்து கோவை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், அம்மாபேட்டை – அந்தியூர் – அத்தாணி – கோபி – குன்னத்தூர் – பெருமாநல்லூர் வழியாக மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
மற்ற மாற்று வழிகள்
காங்கேயம் → அறச்சலூர் : சென்னிமலை வழியாக
கந்தசாமிபாளையம் → ஓடாநிலை : எலவநத்தம் → வடுகப்பட்டி பிரிவு வழியாக
வெள்ளோட்டம் → அறச்சலூர் : கள்ளுக்கடை மேடு → மாரியம்மன் கோவில் → அவல்பூந்துறை → கனகபுரம் பாதை
எழுமாத்தூர் → ஈரோடு : சந்தை குட்டை → காசிபட்டி
சென்னிமலை கைகாட்டி → அறச்சலூர் : மேற்கு தலவுமலை வழியாக
பொது மக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் இந்த தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, சீரான போக்குவரத்துக்கு உதவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
English Summary
Chief Minister MK Stalins visit Erode Entire district transport route map updated