மீண்டும் எண்ணப்படும் தபால் வாக்குகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் 370 வாக்குகள் குறைவாக பெற்று பழனி நாடாரிடம் தோல்வி அடைந்தார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பதிவான வாக்குக்கும் எண்ணப்பட்ட வாக்குக்கும் வித்தியாசம் இருப்பதால் தபால் வாக்குகள் மற்றும் 28 முதல் 30ஆவது சுற்று வரை உள்ள வாக்கு பெட்டிகளில் பதிவான வாக்குகளை மரியன்னைக்கு உத்தரமேடு வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு பதிவு செய்த எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே 10 நாட்களுக்குள் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு செலவுக்காக பணக்காரருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC orders recount Tenkasi constituency postal votes


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->