#BigBreaking || சென்னையில் முககவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்.! மேலும் பல உத்தரவுகளை பிறப்பித்த சென்னை மாநகராட்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை பகுதியில் முககவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்றும், அப்படி முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு வெளியாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் 500 ரூபாய் அபரதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மார்க்கெட் பகுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்றவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Facemask Must july 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->