உச்ச நீதிமன்றத்திற்கே சவால் விடும் மத்திய அரசு..! போட்டு தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே ஏற்பட்டு வந்த அதிகார மோதல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர்த்து மற்ற அனைத்து நிர்வாக அலுவலகங்களையும் நியமிக்க டெல்லி அரசுக்கே உரிமை உள்ளது. 

நிர்வாகம் தொடர்பாக டெல்லி சட்டசபை மற்றும் புது டெல்லி அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனை படியே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீர்த்துப் போகும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி டெல்லி முதல்வர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சேவை ஆணையம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் இத்தகைய அவசரத் சட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரே வாரத்தில் அவசர சட்டம் மூலம் மத்திய அரசு மாற்றி உள்ளது. இது உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு விடும் வெளிப்படையான சவால் ஆகும்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இது அமைந்துள்ளது. இது நீதிபதிகளை அவமதிக்கும் செயலாக உள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். மத்திய அரசு டெல்லி அரசின் பணிகளின் வேகத்தை குறைக்கலாம், ஆனால் தடுத்து நிறுத்த முடியாது.

இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமான சட்டத்தை கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என மத்திய அரசு காத்திருந்தது. இது சட்டவிரோதமானது என்று அவர்களுக்கு தெரியும். உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டம் ஐந்து நிமிடம் கூட நிற்காது. உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறை முடிந்து திறந்தவுடன் நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt will challenge to Supreme Court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->