எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்தது மத்திய அரசு.! விவாதத்திற்கு தயாராகும் பாஜக.!! அனல் பறக்கும் டெல்லி அரசியல்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 3 நாட்கள் விவாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பதிலளிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் ஏற்பட்ட எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கலாம் எனவும், அடுத்த மூன்று நாட்களுக்கு எதிர்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தலாம் எனவும், இந்த விவாதத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பதில் அளிப்பார் எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு முன்பே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க உள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt decides to hold debate on no confidence motion


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->