ஓசி பஸ்சுக்கு எதிரான விமர்சனத்திற்கு வழக்கு பதிவு! ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எதிர்க்கட்சி கொறடா அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாத முதல்வர்! மக்களுக்காக குரல் கொடுக்கும் கழக உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு! 

கோவை அடுத்த மதுக்கரையில் அரசு பேருந்து மூதாட்டி ஒருவர் ஓசி பஸ்ஸில் பயணம் செய்ய மாட்டேன் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதிமுகவின் தகவல் தொழில்நுட்பு நிர்வாகிகள் சிலர் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுக்கரை திமுக நகரச் செயலாளர் ராமு மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மதுக்கரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான ஆர்.ப்ரித்விராஜ், மதிவண்ணன், விஜய்ஆனந்த் மற்றும் துளசி அம்மாள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இவர்கள் வேண்டுமென்றே அரசு பேருந்தில் பயணம் செய்து ஓசி பஸ்ஸில் பயணம் செய்ய மாட்டேன் என அரசு பேருந்து நடத்துனரிடம் கட்டாயப்படுத்தியதும், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் நான்கு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் மதுக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அதிமுக நிர்வாகிகள் மீதான வழக்குப்பதிவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை தரைக்குறைவாகவும், இழிவாக நடத்தும் வகையிலும், நாகரிகம் அற்ற முறையில் பேசிய அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கழகத் தொண்டர் பிரித்திவிராஜ் மீது கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலையத்தில் பொய் வழியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இல்லை எனில் மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அனுமதி பெற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேற்கு மண்டல காவல்துறை ஐஜி அலுவலகம் முன்பும் ஜனநாயக ரீதியில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையினை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case registered for criticism against free bus The opposition whip announced that they will besiege the IG office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->