வெற்றி பெற்றவுடன் CAA சட்டம் ரத்து..மம்தா பானர்ஜி உறுதி.!! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது தேர்தலும் இருக்காது.

பாஜக ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மதங்களை வைத்து மக்களை பிளவுபடுத்துவதில் திரிணமுல் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை.

இந்தியாவில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ரத்து செய்யப்படும். அசாமில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் 126 தொகுதிலும் வேட்பாளரை போட்டியிடும் என்று பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CAA act cancel Mamta Banerji speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->