ஜெ., மரணம் - அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அறிக்கையின்படி, சசிகலா, மருத்துவர் கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (அதிமுக), சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் (எடப்பாடி பழனிச்சாமி தரப்பு) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பே ட்டியில், "ஆறுமுகசாமி ஆணையம்  வெளியிட்டுள்ள கருத்துக்கள், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னதைப் போலவும்  கூறப்பட்டுள்ளது.

எனக்கு மடியில் கனமில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

C Vijayabaskar say about jayalalitha death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->