அடாவடி செய்த உதயநிதியின் பவுன்சர்கள்- தகாத வார்த்தைகளில் செய்தியாளர்களுக்கு மிரட்டல்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரின் பவுன்சர்கள் செய்தியாளர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது அடாவடியை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்களை தகாத வார்த்தைகளில் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மயிலாடுதுறையில் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரின் பவுன்சர்கள் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மக்களின் குறைகளை தெரிவிக்கும் உதவி எண் மற்றும் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில செய்தியாளர்கள் தவிர மற்ற ஊடகங்களை சார்ந்த செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி செய்தியாளர்களை பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின்னர் அடுத்த நிகழ்ச்சியாக திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியிலும் செய்தியாளர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளில் மிரட்டியுள்ளனர்.

இதனால் செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற அமைச்சர்கள் எல்லாம் காவல்துறையினரின் பாதுப்புடன் வரும்போது, அமைச்சர் உதயநிதி மட்டும் பவுன்சர்களோடு வருவதே விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இந்த சம்பவம் செய்தியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bouncers of Udhayanidhi who did mischief threatened journalists with inappropriate words


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->