இரட்டை இலையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு.. அண்ணாமலை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நேற்று அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாஜக தரப்பினரும் எதிர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்.

தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது "தேசிய கட்சி என்ற முறையில் அதிமுக இரு அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

பாஜக எந்த ஒரு அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை. ஆரம்பம் முதலே நான் தெளிவாக சொல்வது ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான். அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவின் நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP support for AIADMK candidate contesting in double leaf


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->