அரசியலிலிருந்து விலகிய பாஜகவின் முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் பாஜகவினர்.!! - Seithipunal
Seithipunal


அரசியலில் இருந்து விலகுவதாக இந்திய மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீதரன் பாலக்கோடு தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 

இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை. அதற்கான காலம் கடந்து விட்டது. நான் அரசியலை கைவிட காரணம் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பது மட்டுமே. நான் எப்போதுமே அரசியல்வாதியாக இருந்ததில்லை. ஒரு ஆட்சிப்பணியாளராகவே அரசியலில் இணைந்து. 

மக்கள் சேவைக்காக அரசியலை  கடந்து மூன்று தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறேன். முதன்முறையாக நான் தோற்ற போது வருத்தமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றாலும் பயன் இருக்கப்போவதில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் ஒரு கட்சியின் ஒற்றை எம்எல்ஏவாக இருந்து என்ன செய்துவிட முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp sreedharan quits active politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->