திடீர் திருப்பம்... பாஜக‌வின் முடிவால் OPS அப்செட்..!! அப்போ O.P ரவீந்திரநாத் நிலை? - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இணைந்து இதில் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜகவின் மேலிட குழுவினர் ஓபிஎஸ் அணியினர் மற்றும் டிடிவி தினகரனுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து உள்ள நிலையில் தற்போது வரை கூட்டணியில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இதற்குக் காரணம் ஓபிஎஸ் அணியினருக்கும் டிடிவி தினகரன் மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது ஓபிஎஸ் சார்பில் பாஜகவுக்கு இரண்டு கோரிக்கைகள் வைத்ததாக கூறப்படுகிறது. 

அதில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தங்கள் அணிக்கு 13 இடங்கள் ஒதுக்க வேண்டும் எனவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியானது. 

ஆனால் பாஜக தரப்பு ஓபிஎஸ் அணிக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் எனவும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் நிர்பந்தித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஓபிஎஸ் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் முனுமுனுகின்றனர். 

இதற்கு காரணம் பாஜகவின் நிபந்தனை ஏற்று தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவை கைப்பற்றும் திட்டம் பாழாகிவிடுமோ என்ற ஐயம் அவரிடம் எழுந்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்து பாஜக ஆதரவில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இருக்க எது வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடுவார்களா அல்லது பாஜகவுக்கு வெளியிலிருந்து ஆதார் தெரிவதாக கூறி தேர்தலை புறக்கணிப்பார்களா என்பது பின்வரும் நாட்களில் தான் தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP rejected OPS 2 request for NDA alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->