பொன்முடி செய்தது மிகப்பெரிய தவறு.. காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ்.. குமரியில் குஷ்பூ பேட்டி...!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விவேகானந்தா கேந்திராலயா பள்ளியில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாளை ஒட்டி விவேகானந்த நல்லோர் வட்டம் சார்பில் 1200 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பங்கேற்றார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துத்துவாவை பயன்படுத்துகின்றன" என குற்றம் சாட்டினார்

மேலும் பேசிய அவர் "தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலையில் டர்பன் கட்டுவது, பூணூல், கோவில் போன்றவை எதிர்க்கட்சிகளுக்கு ஞாபகம் வருகிறது. கோயிலுக்கு போக வேண்டாம் என்று சொல்பவர்கள் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு சென்று மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

ஆளுநர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தவறா தான் நடக்கிறது. திமுக ஒரு அரசாங்கத்தை நடத்துகிறது. அந்த அரசாங்கத்திற்கு மேல் ஆளுநர் இருக்கிறார். அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கு தான் ஆளுநர் இருக்கிறார். சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறும் பொழுது அமைச்சர் பொன்முடி "போயா" என கை ஜாடை காட்டியுள்ளார்.

பொன்முடி செய்தது மிகப்பெரிய தவறு. இதேபோன்று பெண்கள் பேருந்தில் ஓசியில் போவதாக அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தமிழகம், தமிழ்நாடு என இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என பேசியுள்ளார். அவருக்கு எதிராக ஏன் யாரும் கோஷம் போடவில்லை.

ஏனென்றால் காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் கே.எஸ் அழகிரி பேச்சுக்கு மதிப்பில்லை. தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷம் போடும் பொழுது மக்கள் அவர்களை கூர்ந்து கவனிப்பார்கள் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Khushbu condemns Minister Ponmudi actions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->