நீ எவண்டா?.. அவனே-இவனே.. உச்சக்கட்ட கொந்தளிப்பில் எச்.ராஜா.. சரமாரி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


பட்டிமன்ற பேச்சாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நெல்லை கண்ணன், அரசியலில் கடந்த சில வருடமாக சர்ச்சையாக பேசி தன்னைத்தானே சிக்கலில் சிக்கவைத்துக்கொள்கிறார். ஏற்கனவே பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் பேசி சர்ச்சையான நிலையில், அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். 

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சி.பி.ஐ.எம் சார்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன், திமுக மற்றும் பாஜகவினரை இழிவுபடுத்தி பேசியிருந்தார். இதனால் அவருக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்க புகார்கள் அந்தந்த கட்சிகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை கண்ணனின் பேச்சிற்கு பாஜக எச்.ராஜா கடுமையான கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் பேசியுள்ளதாவது, " பாய் வியாபாரி கண்ணன் என்பவன் ஒருவன் இருக்கிறான். என்னை மன்னிக்க வேண்டும். நான் மரியாதையாக பேச வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அவன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை போட்டுத்தள்ளுங்கள் என பேசுகிறார். இவர்களுக்கு எச்.ராஜாவை ஏசவில்லை என்றால் தின்ற சோறு இடுப்புக்கு கீழ் இறங்காதா?. என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?.

நான் நெல்லை கண்ணனை விமான நிலையத்தில் சந்தித்தாக பேசுகிறார். தேவகோட்டை கந்தசஷ்டி விழா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மட்டுமே அவரை சந்தித்துள்ளேன். கற்பனையாக விமான நிலையத்தில் சந்தித்தாக கூறுகிறார். என்னை ஏன் பிராமணன் என்று கூறுகிறேன் என்று கேட்கிறார். நான் எப்போது அப்படி கூறினேன். நான் கேட்கிறேன் திமுக, திக, பெரியாரிஸ்ட் போன்றோருக்கும் - நெல்லை கண்ணனுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லை. இவர்கள் குறிக்கோள் இந்து மதத்தை அளிப்பதே. பல பொற்கீஸ் நான் பிகாரி என கூறுகிறான். அவனுக்கு தமிழ் மொழி தெரியாது.

உண்மையான சைவமாக நெல்லை கண்ணனாக இருந்தால், " காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது, நாதன் நாமம் நமச்சிவாயமே " என்று உள்ளதை ஏற்றுக்கொள்ளாதவன் சைவனா?. காசுக்காக எதையும் பேசக்கூடாது. நான் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து சிறிய கூட்டத்தில் இருந்து, பெரிய அளவிலான கூட்டம் வரை பேசியுள்ளேன். தொடக்கத்தில் 5 பேர் உள்ள கூட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் பேர் வரை உள்ள கூட்டத்தில் பேசியுள்ளேன். இந்த எச்.ராஜா எந்த கூட்டத்திற்கு இவ்வுளவு வாங்கி வந்தார் என கூற முடியுமா? " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja highly Angry and Condemn Nellai Kannan Speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->