"திமுக எனும் கேடுகெட்ட இயக்கம்".. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொட முடியாது.!! பாஜக நிர்வாகி சவால்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்ட மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உள்துறை செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதியும் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது 

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தில் வெற்றிகரமாக #RSS பேரணி! ஒரு பிரச்சனையும் இன்றி தமிழகத்தில் 45 இடங்களில் #RSS பேரணி நேற்று நடந்து முடிந்து விட்டது. இப்பேரணிக்கு மீண்டும் மீண்டும் தடை விதித்து, இன்று ஒரு போதும் தடை விதிக்க முடியாதபடி உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வழிவகை செய்த முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒரு வகையில் நன்றி.

நேரு, இந்திரா காந்தி போன்ற சர்வ வல்லமை பெற்றிருந்தவர்கள் எல்லாம் முயற்சி செய்து செய்ய முடியாத ஒன்றை, ஒற்றை மாநிலத்தில் வெறும் 30% செல்வாக்கு கூட இல்லாத தி.மு.க எனும் கேடுகெட்ட இயக்கம் செய்ய பகல் கனவு காணுமெனில், அது கனவோடு தான் முடியும் என்பது தான் எதார்த்தம்.

வாக்குவங்கிக்காக #RSS இயக்கத்தை எல்லாம் தொடலாம் என நினைத்தால் அது நல்ல வகையில் முடியாது என்பதை தி.மு.கழகம் அறிந்து வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. பார்ப்போம்." என சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார். சூர்யாவின் பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive suryah tweets criticizing DMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->