அதிகார மமதை கண்களை மறைக்கிறதா.? காதுகளை அடைகிறதா.? மு.க ஸ்டாலினை ரவுண்டு கட்டிய பாஜக..!! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைமை நிலை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான வார்த்தைகளால் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பலதரப்பட்ட மக்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் "சிவாஜி கிருஷ்ணமூத்தி என்ற ஒரு அற்ப மனிதனை தூண்டி விட்டு பெண்கள் குறித்து, குறிப்பாக குஷ்பு குறித்து பேச வைப்பது திமுக தலைமை தான். பெண்கள் நிறைந்த பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசும் துணிவு திமுகவின் கலாச்சாரம். அதுவே முதலமைச்சர் சொல்லும் திராவிட மாடல்!

ஆபாசமே உன் பெயர் திமுகவா? ஆளுநர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை, கருத்துக்களை பேச வேண்டும் என திமுக தலைமையே விரும்பியதால் தான் சில நாட்களுக்கு முன் மீண்டும் திமுக தலைமையின் ஒப்புதலோடு தான் இணைத்துக்கொண்டதாக திமுக தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

திமுக வின் உறுப்பினர்கள் உள்ள குடும்ப பெண்கள் தரக்குறைவாக பேசுவோரை தட்டி கேட்க வேண்டும். இது போன்று ஆபாசமாக பேசக்கூடிய நபர்களை அனுமதிக்கக்கூடாது என்று தி மு க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களை நிர்பந்திக்க வேண்டும். நாகரீக அரசியலுக்கு அப்பாற்பட்டு இது கேவலம் என்று கூட தெரியாத அளவிற்கு அதிகார மமதை முதல்வரின் கண்களை மறைக்கிறதா? காதுகளை அடைக்கிறதா? உடன் இந்த நபர் கைது செய்யப்பட்டு கடும் தணடனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP demands arrest of DMK obscene speaker


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->