திமுக + பாஜக கூட்டணி அமையும்..!! அதிமுக எம்.பி சி.வி சண்முகத்திற்கு தகுதி இல்லை..!! பாஜக கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழக அரசுசைக் கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் "நாடாளுமன்றத் தேர்தலின் திமுக - பாஜக கூட்டணி அமையும். திமுகவுடன் கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளையும் ஓடப் போகிறார்கள். ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள், இல்லை எனில் காங்கிரஸை கழற்றி விடுங்கள். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி கொடுத்துவிடுவோம் என பாஜக தலைமை திமுகவிடம் சொல்லிவிட்டது" என பேசி இருந்தார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்தின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அரசியல் எதிர்களாக இருக்கும் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க இருப்பதாக பேசியது பெரும் விவாதத்தினை உண்டாக்கியது. இந்த நிலையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அதிமுக எம்.பி சி.வி சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் "அ.இ.அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி சண்முகம் அவர்கள் பாஜகவுடன் தி.மு.க கூட்டணி வரும் என்றும், தி.மு.கவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க அரசின் செயல்பாடுகளை தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும்.

 பாரதிய ஜனதா கட்சி எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை. மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் தமிழக பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP condemns CV Shanmugam spoke about DMK-BJP alliance


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->