ஈரோடு இடைத்தேர்தல் | முதல் ஆளாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள, பாஜக தேர்தல் பணி குழுவை அமைத்துள்ளது.

வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், தமிழகத்தில் முதல் கட்சியாக பாஜக இந்தர்தலுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை தற்போது பாஜக அமைத்துள்ளது.

இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில், "தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆனது வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவில் பாஜகவின் ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர், சரஸ்வதி தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மகளிர் அணி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai erode By election 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->