கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தொடங்கிய சட்டமன்ற தேர்தல்.! முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

பீகார் சட்டமன்ற தேர்தலில் 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 அமைச்சர்கள் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மத்திய அரசு பாதுகாப்பு பணிக்காக 30000 மத்திய பாதுகாப்பு படை வீரர்களை இறங்கியுள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் முக கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 23 லட்சம் கையுறைகள்  ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் இரண்டு கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் 80 வயது கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க தபால் ஒட்டு  நடைமுறையிலுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->