ஜெயலலிதா மரண மர்மம்‌ குறித்த விசாரணை.! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரண மர்மம்‌ தொடர்பாக விசாரணை நடத்தும்‌ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின்‌ ஆயுட்காலத்தினை, மேலும்‌ 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின்‌ முன்னாள்‌ முதல்வர்‌ ஜெயலலிதா மரண மர்மம்‌ தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சென்னை உயர்‌ நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்‌, கடந்த 2017 செப்டம்பர்‌ 25ஆம்‌ தேதி ஆணையம்‌ அமைக்கப்பட்டது. கடந்த 2017 நவம்பர்‌ 22ஆம்‌. தேதி ஆறுமுகசாமி ஆணையம்‌ விசாரணையைத்‌ தொடங்கியது.

முன்னாள் அதிமுக அமைச்சர்‌ விஜயபாஸ்கர்‌, முன்னாள்‌ தலைமைச்‌ செயலாளர்‌ ராமமோகன ராவ்‌, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்‌, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர்‌, ஜெயலலிதாவின்‌ போயஸ்‌ இல்லத்தில்‌ பணியாற்றியவர்கள்‌, உறவினர்கள்‌ என இதுவரை 150க்கும்‌ மேற்பட்டவர்களிடம்‌ இந்த ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. 

விசாரணை ஆணையத்தின்‌ கால வரம்பு மூன்று மாதங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017 டிசம்பர்‌ மாதத்திலிருந்து ஆணையத்தின்‌ கால அவகாசம்‌ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,இந்த விசாரணை ஆணையத்தின்‌ கால அவகாசம்‌ நாளை (ஜூலை 24) நிறைவடைகிறது. 

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arumugasamy Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->