எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதில் மட்டும்தான் தீவிரமா...? - முதலமைச்சர் விஜயை நோக்கி நயினார் நாகேந்திரன் பாயும் கேள்விகள்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசு அதில் தோல்வியடைந்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். காவல் ஆய்வாளர் முதல் அரசியல் கட்சி நிர்வாகிகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் நிலவுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், தவெக அரசின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,"சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே, தவறைத் தட்டிக்கேட்கச் சென்ற காவல் ஆய்வாளர் ஒருவரை மதுபோதையில் இருந்த நபர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், ராமநாதபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவர் சூரங்கோட்டை முத்துசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.

தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகி முத்துசாமி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.காணொளிகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆட்சியில், காவல்துறை அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழகத்தின் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களின் பாதுகாப்பை நினைத்துப் பார்க்கும்போதே அச்சம் ஏற்படுகிறது.

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம் என்ற அளவுக்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறேன். இத்தகைய நிலைக்குத் தமிழகத்தைத் தள்ளியுள்ள திறனற்ற தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.தேர்தல் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என முழங்கிய ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, குற்றவாளிகள் அச்சமின்றிச் செயல்படுவதாகத் தெரிகிறது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது.கடந்த 150 நாட்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 200-க்கும் அதிகமாகவும், கொலைக் குற்றங்கள் 150-க்கும் அதிகமாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 150-க்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களையும், பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள புகார்களையும் பார்க்கும்போது, மாநிலத்தின் எதிர்காலம் குறித்து கவலை அதிகரிப்பதாகவும், தவறான தலைமையின் கீழ் தமிழகம் சென்றுகொண்டிருக்கிறதோ என்ற கேள்வி எழுவதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அவர்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வது போன்ற அரசியல் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிக ஆர்வம் காட்டுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் காட்டும் முனைப்பை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் முதலமைச்சர் காட்ட வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே ஓர் ஆட்சியாளரின் கடமையல்ல. தங்களை நம்பி வாக்களித்த மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே நல்லாட்சியின் அடையாளம்.

எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you serious only about buying MLAs Nagendran questions directed at Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->