இது உங்க அப்பா வீட்டு சொத்து இல்லை, இது  மக்களோட சொத்து! அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், "சென்னையில் நடைபாதையை ஆக்கிரமித்து 55' உயர ராட்சஸ கொடி கம்பம் வைத்த திமுக கட்சியினர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? 

உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக எங்கள் நடைபாதையை ஆக்கிரமிக்கலாமா உதயநிதி ஸ்டாலின் அவர்களே? இதென்ன உங்க வீட்டு சொத்தா?

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருக்கும் அன்பில் மகேஷ் அவர்களுக்கு, நடைபாதையில் இவ்வாறு கொடி கம்பம் வைப்பது தவறு என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாதா? 

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இதை திறந்து வைத்த அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

இந்த தொகுதி MLA எழிலன் அவர்கள் தொகுதி மக்களின் நடைபாதையை பாதுகாக்க போகிறாரா? அல்லது 
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு கொடி கம்பத்தை பாதுகாக்க போகிறாரா? 

சென்னை போலீஸ் தூக்கத்தில் இருந்து எப்பொழுது விழித்துக்கொள்ளும்?" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arappor iyakkam condemn to stalin dmk govt


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->